பொதிகை தொலைக்காட்சியில் வரவிருக்கும் அத்தனை புதிய் தொடர்களும் டிஆர்பி வரிசையில் முன்னிலை பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பொதிகை தொலைக்காட்சி HD வடிவில் ஒளிபரப்பாக இருக்கிறது. மீண்டும் புத்துயிர் பெற இருக்கும் பொதிகையில் பல புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் `ராடான்' தயாரிப்பில் `தாயம்மா குடும்பத்தார்' என்கிற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தத் தொடரில் 'சந்திரமுகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை பொம்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்து மற்றொரு தொடரில் சில வருடங்களுக்குப் பிறகு நடிகை சுகன்யா நடிக்கிறார். பொதிகை தொலைக்காட்சியில் வரவிருக்கும் அத்தனை புதிய் தொடர்களும் டிஆர்பி வரிசையில் முன்னிலை பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரேஷ்மா 'பாக்கியலட்சுமி' தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்பட்ட ஒன்றுதான். தவிர, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சீதா ராமன்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் பிஸி ஷெட்டியூல் காரணமாக இரண்டில் ஒரு தொடரில் மட்டும் தொடரவிருப்பதாக முடிவெடுத்துள்ளாராம். அது குறித்து விரைவிலேயே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மணி சந்திரா. நடன இயக்குனராக மக்களிடையே பரிச்சயமானவர். அந்த வீட்டினுள் மக்களிடையே பாராட்டு பெற்ற போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதும் டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான சாண்டியைச் சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குருநாதா' என்கிற கேப்ஷனுடன் பதிவேற்றியிருக்கிறார்.
Leave Comments